மனதின் குமுறல்

நினைத்ததை சொல்லிவிட்டேன் என
நிம்மதியை நாட நினைத்த
என் மனது அவளின்
மனக்குமுறலை போக்க எண்ணுவது
என் மனம் தேடிய
விடைக்காக அல்ல அவள்
மனம் நிம்மதியடைய நினைத்தே

மனதின் குழப்பம்

மனதை சோகம்
ஆட்கொள்ள மகிழ்ச்சியை
மட்டுமே மனம்
நாடுவதும் ஏனோ
ஒரு வார்த்தையை
மட்டும் விரும்புவதால் தானோ

எண்ணத்தின் தெளிவோ
மனதிற்கு புரியவில்லை
கிடைக்குமோ இல்லையோ
என்பதே மனதில் கேள்வியானது.

கேள்வியை எழுப்பிய
மனமோ அதன்
பதிலை ஏற்க மறுக்கிறது

ஏற்க மறுக்கும்
மனதை எண்ணங்களின்
நிலை மாற்றிடுமோ?

அழுகை

உன் அழுகையில் ஆரம்பித்த உறவுகள்
உன் உறவுகளின் அழுகையில் முடிகிறது
வாழ்வின் ஆரம்பமும் முடிவும்
அழுகையிடம் தான் உள்ளதோ!

இரவு

இமைகள் தோறும்
திரைகள் மூடும்
வானில் நட்சத்திரங்களின்
படை ஏறும்
பூமியின் பாதியும்
கருமையில் போகும்
நினைவில் கனவின்
உயிரும் நீழும்
இமையின் திரைகள்
மூடியதும்
கனவின் திரைகள்
திறந்திடும்
இருளின் நிலை

மாறும் வரையில்.....

இனிமை தூரமில்லை

தனிமையின் இடைவெளி தூரம்
இல்லை-இனிமையின் இடைவெளி
நீ காணும் தூரம்
மட்டுமே ஆகையால் கலங்காதே
மானமே உன் தனிமை கண்டு

தனிமை மட்டும் வாழ்க்கை இல்லை

வாழ்வை தெரிந்து கொள்ள
தனிமைதான் பாடம் என்று
என்னதே! தனிமை மட்டும்
சொல்லிடாது வாழ்வின் சோகங்களையும்
அதன் வலிகளையும்