கருவறை

நம் உயிர் தோன்றி
வாழ்வது தாயின்
கருவறையில்
நம் உயிர் மறைந்து
வாழ்வது நம்
பூமி தாயின்
கருவறையில்.....

குறிப்பு :
தாயின் பாசம் பிறப்பிலும் இறப்பிலும் நம்மில் உண்டு


மனம்

ஒரு நிமிடம் கண்ட
உருவத்தை எண்ணி
உயிர் தந்த உருவங்களின்
உயிரை வருத்துவது ஏன் மனமே?

மனதின் தடுமாற்றம்

மனமே நீ நிழல்
உலகத்தை நாடுவதும் ஏனோ!
இன்பம் தந்து உன்னை
நெகிழ வைப்பதால் தானோ !
இன்பத்தின் இருளில் மூழ்கிவிட்டாய்
நிஜத்தின் உண்மையை மறந்துவிட்டாய் .

கனவின் மாற்றங்கள்

ஏன் நினைவுகளை
சொற்களாய் சேர்த்துப்
பார்த்தேன் வாக்கியமானது !
வாக்கியத்தின் ஒலிக்கு
எழுத்து வடிவம்
கொடுத்தேன் கவிதையானது!
உண்மைதான் இவைகள்
அனைத்தும் உண்மையாக
ஏன் நினைவுகளின்

பொருள் மட்டும்
பொய்யானது அவை
கனவில் தோன்றியதால்

அழகு

வானவில்லின் நிறம் ஏழு
என்று நானும் எண்ணியிருந்தேன்

பின்பு தான் அறிந்தேன்
அதன் நிரம் கருமை
என்று உன் இரு
புருவங்களை கண்ட பிறகு......

இரட்டை கோபுரத்தின் புலம்பல்

கண்ணத்தில் என்ன காயம்
எது பின்லாடன் செய்த
மாயம் உன்னிடத்தில் என்ன
நெருப்பு இது பின்லாடன்
ஏன் மீது கொண்ட வெறுப்பு!

காற்றின் கவலை

மனிதா நீ வாழ
என்னை சுவாசிக்கும் உனக்கு
நான் வாழ என்னை
ஏன் நேசிக்க மறுக்கிறாய் ?

வாழ்க்கை

புரியாத கவிதை எனது
வாழ்க்கை இன்னும் ஏனோ
புரியவில்லை இக்கவிதையின் அர்த்தம்!

லட்சியம்

நாம் இந்த உலகில்
வாழும் வாழ்வு
சிறிது என்றாலும்
வாழ்வின் லட்சியங்கள்
பெரிதாகட்டும் ....

வாழ்வு

வாழ்வில் பயணம் சிறிதேனும்
நாம் அடையும் இன்னல்கள்
பெரிதாயினும் - வாழ நினைத்து
விட்டால் அவ்வின்னல்கள் சிறு
துரும்பகிவிடும்

நட்பு

இதயத்தின் ஓசையில்
பிறந்த ஓர் அழகிய
ஓவியம் நம் நட்பு
அதை படைத்த நட்பே
நீயும் அழகுதான்......

திருமணம்

திருமணம் என்பது ஆயிரம்
காலத்து பயிர்
அப்பயிர் வரதட்சனை என்னும்
விதையால் வளர்ந்தது!

முதல் துளி

ஆயிரம் எண்ணங்கள் சேர கண்டேன்
வந்ததோ கனவு துளிகள்
ஆயிரம் நினைவுகள் சேர கண்டேன்
வந்ததோ பசுமை துளிகள்
ஆயிரம் எழுத்துக்கள் சேர கண்டேன்
வந்ததோ கவிதை துளிகள்
ஏன் இரு கண்கள் சேர கண்டேன்
வந்ததோ உன் நினைவு எனும்
கண்ணீர் துளிகள்.......................