நம் கால்களின் வலிகளை
போக்க ஒற்றை காலில்
நிற்கிறது இரு சக்கர
வாகனம்

தண்ணீர் தரும் கண்ணீர் துளிகள்

கண் இமைகளை உயர்த்தி
வானம் பார்த்து ஏங்கும்
நெஞ்சங்களுக்கு ஆறுதல் சொல்ல
வந்தது அவர்கள் கண்களில்
கண்ணீர் துளிகள்

மழை துளிகள் இந்த
மண்ணை முத்தமிடுமோ என
ஏங்கிய நெஞ்சங்களின் கன்னங்களில்
ஆறுதலாய் கண்ணீர் துளிகள்
மட்டுமே முத்தம் வைத்து
மறைந்தது.....

பெண்ணே உன் புது
வாழ்வை எண்ணி உன்
உதடுகள் சிறிது வெட்கம்கொள்ள
உன் கருவிழிகளின் நடுவே
அழகிய நிலவை சோகம்
ஆட்கொள்ள உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய நினைவுகளை நினைத்தே!

புது உறவுகள் அருகேவர
நிழலென நினைத்த உன்
உறவுகள் உன்னிலிருந்து விலகியிருக்க
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய உறவுகளை நினைத்தே!


புது இடமென புகுந்த
இடம் இருக்க புது
மணவாழ்வின் துவக்கம் அதுவாயினும்
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் உயிர் தந்த இடம் நினைத்தே !

புது உறவுகள் உன்
வாழ்வின் வரவாயினும் உன்
உறவுகள் பற்றாகிறதோ என
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் இனிய உறவுகளை நினைத்தே!

தன் மனதில் சேரவிருக்கும்
அவனின் மனம் தன்
எண்ணங்களை ஏற்திடுமோ என்ன
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய எண்ணங்களை நினைத்தே!

மனதின் குமுறல்

நினைத்ததை சொல்லிவிட்டேன் என
நிம்மதியை நாட நினைத்த
என் மனது அவளின்
மனக்குமுறலை போக்க எண்ணுவது
என் மனம் தேடிய
விடைக்காக அல்ல அவள்
மனம் நிம்மதியடைய நினைத்தே

மனதின் குழப்பம்

மனதை சோகம்
ஆட்கொள்ள மகிழ்ச்சியை
மட்டுமே மனம்
நாடுவதும் ஏனோ
ஒரு வார்த்தையை
மட்டும் விரும்புவதால் தானோ

எண்ணத்தின் தெளிவோ
மனதிற்கு புரியவில்லை
கிடைக்குமோ இல்லையோ
என்பதே மனதில் கேள்வியானது.

கேள்வியை எழுப்பிய
மனமோ அதன்
பதிலை ஏற்க மறுக்கிறது

ஏற்க மறுக்கும்
மனதை எண்ணங்களின்
நிலை மாற்றிடுமோ?

அழுகை

உன் அழுகையில் ஆரம்பித்த உறவுகள்
உன் உறவுகளின் அழுகையில் முடிகிறது
வாழ்வின் ஆரம்பமும் முடிவும்
அழுகையிடம் தான் உள்ளதோ!