மாற்றங்கள் தேவை என
நினைக்க மட்டும் தெரிந்த
மனதிற்கு அதை பின்பற்ற
தயங்குவதன் காரணம் என்ன?????
மனமே உனது எண்ணம்
வெளிக்கொண்ட வார்த்தைகளின் வேகம்
பெரிதென்பது உண்மையாயினும்
உனது நினைவுகள் சேர்ந்திருக்கும்
இடத்தினை உன்னில் இருந்து
பிரித்திட எண்ணுவதும் சரியோ ?
சரி என்று எண்ணி
விலகிட நினைத்த பின்பும்
உன் நினைவுகள் தனிமையில்
வாழ்ந்திட நினைப்பதும் முறையோ?
வாழ்வும் ஓர் போராட்டமே
வீழ்வோம் என்ன நினைத்துவிட்டு
நீயும் சுமக்கிறாய் கடினம்
என்ன வாழ்வினை
வாழ்வோம் என்ன நினைத்துவிடு
சுமையான வாழ்வும் உன்னை
சுமக்கும் ஓர் சுகமாய்.....
வெளிக்கொண்ட வார்த்தைகளின் வேகம்
பெரிதென்பது உண்மையாயினும்
உனது நினைவுகள் சேர்ந்திருக்கும்
இடத்தினை உன்னில் இருந்து
பிரித்திட எண்ணுவதும் சரியோ ?
சரி என்று எண்ணி
விலகிட நினைத்த பின்பும்
உன் நினைவுகள் தனிமையில்
வாழ்ந்திட நினைப்பதும் முறையோ?
வாழ்வும் ஓர் போராட்டமே
வீழ்வோம் என்ன நினைத்துவிட்டு
நீயும் சுமக்கிறாய் கடினம்
என்ன வாழ்வினை
வாழ்வோம் என்ன நினைத்துவிடு
சுமையான வாழ்வும் உன்னை
சுமக்கும் ஓர் சுகமாய்.....
ஒரு பெண்ணின் நிலை
உயிர் தந்தவரின் மனதை
குழப்பம் ஆட்க்கொள்ள
தன்னில் பாதியான நினைத்த
உள்ளம் காத்துகிடந்திட
இரு மானமும் வேண்டுமே
காத்து தவிக்கும்
ஒரு மனதின் பாசப்போராட்டம்.......
(குறிப்பு : இது சில பெண்களுக்கு மட்டும் அல்ல சில ஆண்களுக்கும் பொருந்தும் )
முதல் குழந்தை
தன்னுள் ஓருயிர் சுமந்து
பிஞ்சு நடை நடக்கும்
தலைவியின் நடைக்கண்டு ரசிக்கும்
தலைவனுக்கோ அவள் தான்
முதல் குழந்தை!!!!!
பிஞ்சு நடை நடக்கும்
தலைவியின் நடைக்கண்டு ரசிக்கும்
தலைவனுக்கோ அவள் தான்
முதல் குழந்தை!!!!!
Subscribe to:
Posts (Atom)